க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி 2013 ஆம் ஆண்டு ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து இரண்டாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தை இயக்கினார்.
அதையடுத்து சில ஆண்டுகளாக படங்கள் ஏதும் அவர் இயக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப்
இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். கௌரி கிஷன், ரேணுகா கருணாகரன், நிர்மல் பலழி, பூர்ணிமா பாக்யராஜ், ஜிஎம் குமார், சின்னி ஜெயந்த், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'பேப்பர் ராக்கெட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவனம் ஈர்க்கும் போஸ்டரும் உடன் வெளியாகியுள்ளது. Zee5 தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து காலை மாலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.