இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த பிரச்சனைகளால் விலைவாசி உயர்ந்துகொண்டே சொல்வதால் மக்கள் அவதிகளுக்கு உள்ளாகி வருக்கின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
