தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ளார்.
ஆம், தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ஹே சினாமிகா என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.
மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆச்சாரியா. இப்படத்தில் நடிகை காஜல் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆச்சாரியா படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அப்பட கதாநாயகி காஜலும் ப்ரோமோஷனுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ராம் சரண் நீங்கள் கர்பமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க வேண்டும் என கூறியுள்ளாராம். ப்ரோமோஷன் பணிகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என காஜலை தடுத்து நிறுத்திவிட்டாராம்.
