உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் தங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் இருக்கும் சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றி உள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் (Hanna Maliar) தெரிவித்துள்ளார்.
இர்பின், புச்சா, கோஸ்டோமல் மற்றும் முழு கீவ் பகுதியும் ரஷ்ய படையெடுப்பாளரிடமிருந்து விடுவிக்கப்பட்டது என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.