நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ளது.
அதோடு மக்களின் இறையான்மையின் அம்சங்களான அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு மற்றும் அரச அதிகாரிகள் மீறாமல் இருக்கின்றனர் என்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.