More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரஷியா-உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு உதவ இந்தியா தயார் - ரதமர் மோடி
ரஷியா-உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு உதவ இந்தியா தயார் - ரதமர் மோடி
Apr 02
ரஷியா-உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு உதவ இந்தியா தயார் - ரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வந்துள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் ஐதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். 



இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியையும், லாவ்ரோவ் சந்தித்து உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்தார். 



உக்ரைனுடன் ரஷியா நடத்திய வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை குறித்து மோடியிடம், லாவ்ரோவ் விளக்கியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் போரை விரைவில் நிறுத்துமாறு ரஷியாவிற்கு அழைப்பு விடுத்தார். உக்ரைன்- ரஷியாவிற்கு இடையேயான மோதலுக்கு தீர்வு காணும், அமைதி முயற்சிகளுக்கு பங்களிக்கவும்



இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.



இந்தியா-ரஷியா இருதரப்பு உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் மோடியிடம், ரஷ்ய வெளியுறவு மந்திரி விவாதித்தாகவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.



உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருவதுடன்,  ரஷியாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec19

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Jul14

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய

Mar04

கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்

May30

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம

Sep17

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை

Jan30

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982

Apr15

அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ

Mar20

சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப

Sep21

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி

Jul17

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே

Jan25

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ

Jun07

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ

May09