இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உணவைத் தவிர்க்க அல்லது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கப் பழகிவிட்டனர் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்ற அச்சம் நிலவுவதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூலை முதல் டிசெம்பர் வரையிலான காலப் பகுதியில், 3.4 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவுவதற்குத் தேவையான 63 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 21.35 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.