தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஹீரோயின் ராஷ்மிகாவின் ரோல் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தளபதி 66ல் ராஷ்மிகா சுயநலம் மிக்க, தலைக்கனம் அதிகமாக இருக்கும் பெண் ரோலில் தான் நடித்து வருகிறார். இதுவரை அவர் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை என்பதால் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என தெலுங்கு மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ராஷ்மிகா விஜய் உடன் நடிக்க வேண்டும் என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆசையை கூறி வந்தார். அந்த ஆசை தற்போது தளபதி 63 படம் மூலமாக தான் நிறைவேறி இருக்கிறது.