தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகின் டாப் இசையமைபாளராக திகழ்ந்து வருபவர் ஏ. ஆர். ரகுமான்.
தமிழில் இவரின் இசையில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட முக்கிய திரைபடங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரகுமானின் மகள் கதிஜாவின் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது, இதனிடையே நேற்று அவர்கள் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது. ஆம், ஷாலினி அஜித், ஷாமிலி, அனூஷ்கா அஜித், அத்விக் அஜித் என அஜித்தின் குடும்பமே நேற்று வந்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அஜித்தின் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.