மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் புதிதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம் திறப்பு விழாவின்போது இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடைமேடை மேம்பாலம் மரக்கட்டை மற்றும் இரும்பு ஜெயினால் அமைக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு பின் அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் புதிய மேம்பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது, பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்துள்ளது.