ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹீரோயின்களுக்கு நடுவிலும் பெரிய போட்டி இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா தான் அதிக காலம் தென்னிந்தியாவில் முன்னணியில் இருந்தார்.
தற்போது அவரை பின்னுக்கு தள்ளி பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்து இருக்கிறார். மிஷ்கினின் முகமூடி படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார் பூஜா ஹெக்டே, ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் அடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின் தெலுங்கு ஹிந்தியில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.
விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து அவர் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே 5 கோடி ருபாய் சம்பளம் வாங்குகிறாராம். இதன் மூலமாக அவர் நயன்தாராவை முந்தி இருக்கிறார். நயன் வழக்கமாக ஒரு படத்திற்கு 4 கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார் என்கிற நிலையில், பூஜா ஹெக்டே அவரை ஓவர்டேக் செய்து டாப் இடத்திற்கு வந்திருக்கிறார்.