நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் அவரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டு ஒரு அரசியல் கட்சியினர் மட்டும் தாக்கி பேசி வருகின்றனர். அவரது படங்களில் இருக்கும் விஷயங்களை சர்ச்சையாக்கி இருக்கின்றனர். விஜய்யின் பல படங்களின் ரிலீஸ் நேரத்தில் இப்படி சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் படங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் இருக்கிறது, அதனால் அவர் படங்களை பார்க்காதீங்க என மதுரை ஆதினம் கூறி இருக்கிறார்.
"புள்ளையாரே.. புள்ளையாரே.. உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குது" என விஜய் வசனம் பேசும் படம் ஒன்றை பார்த்தேன். இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கி என சொல்கிறார்கள்" என ஆதினம் கூறி இருக்கிறார்.