More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜெனீவாவிவிலும் உதயமானது கோட்டாகோகம!
ஜெனீவாவிவிலும் உதயமானது கோட்டாகோகம!
Jun 06
ஜெனீவாவிவிலும் உதயமானது கோட்டாகோகம!

 ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன்போது ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக 'கோட்டகோகம' கிளை ஒன்றையும் அவர்கள் நிறுவியுள்ளனர்.



இந்த நிகழ்வில் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் உட்பட ஐரோப்பாவில் வாழும் பெருமளவான புலம்பெயர் இலங்கையர்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை இந்த போராட்டம் , ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பல மணிநேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதை காணமுடிந்தது.



இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.



அத்துடன் பாரிய வாழ்க்கைச் சுமையால் அவதியுறும் மக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.



அதேசமயம் தற்போதைய அரசாங்கம் பதவி விலகி திருட்டு, மோசடி மற்றும் ஊழல் அற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தினால், அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்க, இலங்கை பொருளாதாரத்திற்கு டொலர்களை சேர்க்க தாம் தயாராக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் தெரிவித்தததாக கூறப்படுகின்றது.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07


துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம

May20

ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ

Sep21

450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம்

Mar21

உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க

Jun24

தொழில் அதிபர் 

தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா

May14

சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ

Jul26

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால

Mar11

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப

Aug22

நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்

Oct13

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய

Jun04

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு

Mar16

உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர

May02

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த

Mar05

அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்