More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு
கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு
Jun 04
கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

பயன்படுத்தப்படாத நிலங்ககளில் பயிரிடுவதற்கான வேலைத்திட்டம்



இலங்கையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.



பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்குவது தொடர்பிலும் அரச தலைவர் அவதானம் செலுத்தியுள்ளார்.



பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இதன்போது இலங்கையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 ஆயிரம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயிரிடப்படாத நிலையில் காணப்படுவதாக அரச தலைவர் சுட்டிக்காட்டினார்.



கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு



 



இதனால் 23 தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அந்தக் காணிகளில் பயிரிடுபவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.



 



அரச தலைவரது பணிப்புரை



அத்துடன் தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் எனவும் அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறும் அரச தலைவர் வலியுறுத்தினார்.



பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்கும் போது முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.



அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.  



 



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்

Apr05

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும

Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற

Feb23

கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி

Jul01

 

நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு

Apr17

தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப

Mar18

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித

Feb04

மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ

Aug11

வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ

Jun28

இரத்தினபுரி மற்றும் மொனராகலை  மாவட்டங்களைச் சேர்ந்

Oct21

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி

Oct21

இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப

Jul19

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம

Jan25

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக