நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். படம் இன்று கோலாகலமாக எல்லா மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.
கமல்ஹாசன் அவர்கள் ஒரு மொழியை கூட விடாமல் அனைத்து மொழிகளிலும் புரொமோஷனுக்கு சென்றார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் தற்போது படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து வருகிறார்கள்.
அரசு கொடுத்த அனுமதி
படம் ரிலீஸ் ஆகிவிட்டது, ரசிகர்களும் திரையில் ஆண்டவரை சில வருடங்களுக்கு பிறகு காண்பதால் படு கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் கூட விக்ரம் கொண்டாட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளோம்.
தற்போது என்ன தகவல் என்றால் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு 3 நாள் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 3, 4, 5 என மூன்று நாட்கள் விக்ரம் பட சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.