அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன்(Joe Biden) திட்டமிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது.
துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன்(Jacintha Orton) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன்(Joe Biden), அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம்(Jacintha Orton) அவர் கோரிக்கை விடுத்தார்.