More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பாரதூரமான தவறை செய்து விட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
பாரதூரமான தவறை செய்து விட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
May 30
பாரதூரமான தவறை செய்து விட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

 மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவானது.



எனினும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தவோ, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை தேடவோ விக்ரமசிங்கவால் இன்னும் முடியாமல் போயுள்ளது.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை அமைக்க இணங்கினார்.



இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பதிலாக பொதுஜன பெரமுன அவரது காலைப்பிடித்து இழுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.



கிடைத்த அவசர அழைப்பை ஏற்று விக்ரமசிங்க, பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்தாரே தவிர அவரிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை என்பது அவர் பதவியேற்று மூன்று வாரங்களில் உறுதியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.



பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வெளிநாடுகள் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உதவிகளை வழங்குவதாக இதுவரை எந்த நாடும் உறுதியான வாக்குறுதிகளை வழங்கவில்லை.



மறுபுறம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை தள்ளி வைத்து விட்டு. அரசியலமைப்புத் திருத்தம் என்ற விடயத்தில் பிரதமர் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகிறார்



பட்டினியில் இருக்கும் மக்களுக்கு அரசியலமைப்பு விளக்கங்களை முன்வைப்பதை தவிர வேறு எந்த சாதகமான செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவில்லை.



ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர், உடனடியாக எரிபொருள், மருந்து உட்பட பிரதான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சில குழுக்களை நியமித்தார்.



அந்த குழுக்களுக்கு பொறுப்பாக தனக்கு நெருக்கமான அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, வஜிர யாப்பா அபேவர்தன, பாலித ரங்கே பண்டார ஆகியோரை நியமித்தார்.



மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மக்களால் நிராகரிக்கப்படட நபர்களால் தீர்க்க முடியும் என ரணில் விக்ரமசிங்க நம்பும் விதத்திற்கு அமைய அவர் நெருக்கடியை தீர்க்க போகும் விதம் தெளிவாகி உள்ளதாக பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.



இது சம்பந்தமாக பிரதமர், ஜனாதிபதி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் தான் பாரதூரமான தவறை செய்து விட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.



இந்த நிலைமை காரணமாக கோட்டாபய - ரணில் கூட்டணி மிக விரைவில் முடிவுக்கு வரும் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.



2018 ஆம் ஆண்டு நியமிக்கப்படட மைத்திரி - மகிந்த அரசியல் சதித்திட்ட அரசாங்கம் 52 நாட்கள் பதவியில் இருந்தது. ஆனால், கோட்டாபய - ரணில் அரசாங்கம் அந்த காலத்தை தாண்டி செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May23

கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த

Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Apr09

இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Nov17

மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட

Mar03

பாதுக்க - அங்கம்பிட்டியவில் மனைவியின் உடலில் ஒருதுண்ட

Jul04

மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச

Feb06

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம

Sep19

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்

Sep21

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன

Oct23

'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்

Jan01

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ

May02

கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ

Aug03

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில

Feb13

உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ