More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும்
பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும்
May 29
பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும்

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “இலங்கையில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” எனும் தலைப்பிலான கண்காட்சியைப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.



பிரித்தானியத் தமிழர் பேரவை 13ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியது.





செப்டம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 இல் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கழக(UNHRC) அமர்வுகளின் போது ஜெனீவாவில் காட்சிப்படுத்தியதன் தொடர்ச்சியாக மத்திய லண்டனில் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவை மூன்றாவது முறையாகக் காட்சிப்படுத்தியது.



பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)



கண்காட்சியை இலவசமாக பார்வையிட அனுமதி 



 



இக் கண்காட்சியைப் பொதுமக்களுக்கு இலவசமாகப் பார்வையிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதனால் பெருமளவிலான பல்லின மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இருபது இளம் தலைமுறை செயல்பாட்டாளர்கள் அவர்களிடையே காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு, தேவையான இடங்களில் மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் விளக்கமளித்தனர்.



ஒவ்வொரு காட்சியிலும் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் மிகவும் காத்திரமானதும் முன்னர் எப்போதும் வெளிக் கொண்டு வரப்படாத புதிய தகவல்களாகவும் இருந்தது. கண்காட்சியை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்ட ஏராளமான பல்லின மக்கள் அவற்றைப் படித்து, இளம் தலைமுறை செயல்பாட்டாளர்களிடம் கேள்விகளைக் கேட்டு தங்கள் கைபேசியில் காட்சிகளைப் புகைப்படம் எடுத்தனர்.



பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)



 



1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராகத் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து ஜனநாயக வழிமுறைகளில் எதிர்ப்பைத் தெரிவித்த போது அதனையே சாட்டாக வைத்து தமிழ் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசு முன்வந்தது என்ற விளக்கத்துடன் முதல் காட்சி தொடங்கியது.



இது தமிழ் மக்களை ஆயுத ரீதியாக அழிக்கும் திட்டத்தை 1963ஆம் ஆண்டிலேயே இலங்கை தனது மூலோபாயத்தில் உட்கொண்டு வந்ததை நிரூபிப்பதுடன் இன அழிப்பின் உள்நோக்கத்தையும் (intent of Genocide) வெளிப்படுத்துகின்றது. வன்முறையின் சுழற்சிகள் அவ்வப்போது தொடர்ந்தன, ஒவ்வொரு முறையும் வன்முறையின் தீவிரம் அதிகரித்தது.



பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)



 



நம்பகமான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் தமிழர் தாயகத்தில் தேவையற்ற உயர் இராணுவ நிலைநிறுத்தத்தை மேற்கோள் காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தல், கைது, தடுப்பு, சித்திரவதை மற்றும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை (PTA) பாவித்து தமிழ் மக்களை மரண பயத்துடன் தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்க வழிவகுத்தது.



குடிசார் வாழ்வில் இராணுவ மயமாக்கல், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் போர்வையில் அரச பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர் தாயகத்தில் சனத்தொகை மாற்றம், தமிழ் மக்கள் தொகை வீழ்ச்சி, தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு, தமிழர் தாயகத்தில் பௌத்த கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அவற்றை தம் கைத் தொலைபேசியில் (Mobile phone) பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)



இலங்கையில் சீனாவின் தாக்கம் 



 



இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைக் காட்டும் புள்ளிவிபரத் தரவுகளுடன் வரைபடங்களுடன் காட்சிப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு சீனத் தாக்கம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.



சீனாவின் செல்வாக்கு, குறிப்பாகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின் இலங்கையை அதன் தற்போதைய அவல நிலைக்கு எவ்வாறு இட்டுச் சென்றது என்பதைப் பல காட்சிகள் தெளிவான ஆதாரங்களுடன் சித்தரித்தன.



பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)



 



இறுதிக் காட்சியானது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மாபாதக குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உலகளாவிய மனித உரிமைகள் தடைச்சட்டத்தின் பிரயோகத்தை வலியுறுத்தும் அதேவேளை, இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை உருவாக்குதல், உலகளாவிய நியாயாதிக்க சட்டத்தை (Universal Jurisdiction) வலுப்படுத்தி பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம், நெறிமுறையற்ற வர்த்தகத்தை நிறுத்துதல் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய அம்சங்களை நடைமுறைப்படுத்த கோருகின்றது.



இக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் தொகுக்கப்பட்டு முன்னுரையுடன் “Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் தலைப்பில் ஒரு புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானிய தமிழர் பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் (Photos)






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள

May11

அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து

Dec28

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Mar17

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட

Oct25

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத

Sep20

மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப

Jun10