சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறவும் வணிக வளாகங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. 30க்கும் மேற்பட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டதால், மக்கள் பூங்காக்களில் கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.