More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் சோகத்தின் மேல் சோகம்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவரும் உயிரிழப்பு
அமெரிக்காவில் சோகத்தின் மேல் சோகம்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவரும் உயிரிழப்பு
May 27
அமெரிக்காவில் சோகத்தின் மேல் சோகம்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவரும் உயிரிழப்பு

மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்ததுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.



இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.



அமெரிக்காவில் சோகத்தின் மேல் சோகம்;  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின்  கணவரும் உயிரிழப்பு



 



இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் ஆரம்பப்பள்ளியில் 23 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்த இர்மா ஹர்சியா என்பவரும் ஒருவராவார் .இர்மாவின் கணவர் ஜோ ஹர்சிம்யா. இர்மா - ஜோவுக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகுகிறது. இர்மாவுக்கு 4 குழந்தைகள் உள்ளன.



இதற்கிடையில், ஆரம்பப்பள்ளி துப்பாக்கிச்சூட்டில் தனது மனைவி இர்மா ஹர்சிம்யா உயிரிழந்த செய்தி கேட்டது முதல் அவரது கணவர் ஜோ ஹர்சிம்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், இர்மாவின் கணவர் ஜோவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.



இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜோவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.



அதேசமயம் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியையான தனது மனைவி இர்மா உயிரிழந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் அவரது கணவரான ஜோவும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல.

May08

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar07

மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச

Mar07

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்

Feb26

ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ

Jun02
May11

கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப

Sep24

இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ

Feb15

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு

Jan29

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்

May25

பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு

Mar08

கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந

Jan17

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற

Jan27


அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &

Oct07

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக