யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார்.
இம்மாதம் 29ம் திகதி நடைபெற உள்ள உலகப் புகழ் பெற்ற எடின்பரோ மரதன் நிகழ்வில் உலகிலிருந்து ஏராளமானவர்கள் கலந்துகொள்கின்றார்கள்.
சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தினை 3 மணித்தியாலங்களில் ஓடி முடிக்கவேண்டும்.
எதிர்வரும் ஜூலை மாதம் இலண்டனில் நடைபெற உள்ள கிளி .மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொண்டு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கிளி பீப்பிள் அமைப்பினால் தாயக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.