More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் - மாணவனை காப்பாற்றிய நாய்
இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் - மாணவனை காப்பாற்றிய நாய்
May 26
இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் - மாணவனை காப்பாற்றிய நாய்

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர்.



அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.  



நேற்று காலை அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையை பாடசாலை மாணவர் கடக்க முயன்ற போது பொல்கஹவெலவில் இருந்து வந்த ரயில் குறுக்கு வீதியை அண்மித்துள்ளது.



இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் - மாணவனை காப்பாற்றிய நாய்



இதன் போது மாணவன் ரயிலில் மோதப்போகிறார் என அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்ட போதிலும் ரயில் சத்தம் காரணமாக அவருக்கு கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.



இந்த நிலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த தெரு நாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடிவந்து மாணவன் மீது பாய்ந்துள்ளது. இதன் போது நிலைமையை உணர்ந்த மாணவன் ரயில் கடவையை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.



ஒரு நொடி தாமதமாகியிருந்தால் இளைஞனும் நாயும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருப்பார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் குறித்த மாணவனுக்கு எரிபொருள் பிரச்சினையால் வாகனம் ஒன்று கிடைக்காமையினால் ரயில் வீதியில் பயணித்து பரீட்சை மண்டபத்தை சென்றடைய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் - மாணவனை காப்பாற்றிய நாய் -  தமிழ்வின்






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Sep12

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள

Sep19

மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி

Oct07

புஸ்ஸலாவை இந்து தேசியக் கல்லூரியின் நவராத்திரி கலைவி

Jun02