More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
May 25
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்திலேயே ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   



சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொணடிருந்த போது டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.



இந்நிலையில் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இன்றைய தினம் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.   



திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வண்டியும் களனி நோக்கி பயணித்த கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.



சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பேருந்து வண்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த கனரகவாகனம் மோதியதால் விபத்து நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.



காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr11

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட

Jan20

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக

Mar16

சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு

Sep19

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த

Mar30

அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என

Aug15

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன

Oct03

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக

Aug06

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்

Jan21

வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்

Mar16

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்

Oct05

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து

Oct23

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு

Mar25

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத

Oct23

22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க

May03

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த