உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றுகின்றனர்.
உக்ரைன் மரியபோல் எஃகு ஆலையை நான்கு மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியதாகக் ரஷ்யா கூறியுள்ளது.
இதையடுத்து அசோவ்ஸ்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்ற தொடங்கி உள்ளனர். அசோவ்ஸ்டாலைப் பாதுகாக்கும் கடைசி உக்ரேனியப் போராளிகளும் சரணடைந்ததாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறிய நிலையிலேயே கன்னி வெடிகளை அகற்றும் பணிகள் நடக்கிறது.
ரஷ்ய வீரர் nom de guerre Babai கூறுகையில், பணி மிகப்பெரியது, எதிரிகள் தங்கள் சொந்த கண்ணிவெடிகளைப் புதைத்தனர்.
எதிரிகளைத் தடுக்கும் நோக்கில் நாங்களும் கண்ணிவெடிகளை புதைத்தோம். எனவே எங்களுக்கு முன்னால் இரண்டையும் அகற்றும் சவால் உள்ளது, இந்த பணியை செய்ய இரு வாரங்கள் தேவைப்படும் என கூறியுள்ளார்.
அதன்படி ஒரு வித பீதியுடனே இந்த பணியை அவர்கள் மேற்கொள்வதை காணமுடிகிறது.