ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன் அடித்து உதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.
இதனிடையே ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்கூட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின சிறுமியை வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி சீருடையில் பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படும் நிலையில் சிறுவன் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் இதுதொடர்பாக தனது கண்டனத்தை பதிவிட்ட நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையில் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தாக்குதல் நடத்திய அந்த மாணவன் 9 ஆம் வகுப்பு படிக்கும் தும்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
https://twitter.com/i/status/1528408383870513152