More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரிட்டனின் தீவு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் -வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனின் தீவு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் -வெளியான அதிர்ச்சி தகவல்
May 23
பிரிட்டனின் தீவு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் -வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.



பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.



கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினர் அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர்.





அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டியோகோ கார்சியா இராணுவதளத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது முதல், வெளி உலகத்துடனான அவர்களது தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முதல் ஆறு வாரங்கள் அவர்களை எவரும் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது என இலங்கை தமிழ் அகதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லேய் டே என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.



தீவிலிருந்து வெளியே கூடாரம் போன்றவற்றிற்குள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தாங்கள் சர்வதேச பாதுகாப்பை கோருவதாக அவர்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.





ஆனால் அவர்கள் புகலிடக்கோரிக்கையை முன்வைப்பதற்கு உதவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரிட்டனை சேர்ந்த சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.



 



பிரிட்டனின் தீவு ஒன்றில்  அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் -வெளியான அதிர்ச்சி தகவல்



பிரிட்டிஸ் நிறுவனமான லெய்டே பிரிட்டனின் வெளிவிவகார செயலாளருக்கும் பிஐஓடி ஆணையாளருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பில் மூன்று கடிதங்களை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.



தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது அவர்களிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களின் கீழ் பிரிட்டனிற்கு உள்ள கடப்பாடுகளிற்கு இது முரணாணவிடயம் என பிரிட்டனின் சட்ட நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.





நாங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் டியாகோ கார்சியாவில் அவர்கள் அனுபவித்துவரும் விடயங்கள் மற்றும் அவர்களிற்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முன்னேற்றமின்மை குறித்து அதிகளவு அவநம்பிக்கை அடைந்துள்ளனர் என பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் இந்த வாரம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.



இலங்கை அகதிகளில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம். அவர்களில் பலரின் மனோநிலை மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்கள் என வர்ணிக்க முடியும் எனவும் பிரிட்டன் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.



பிரிட்டனின் தீவு ஒன்றில்  அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் -வெளியான அதிர்ச்சி தகவல்



 தாங்கள் தீவில் இறந்தால் பிரிட்டன் என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடல்களை பிரிட்டிஸ் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர் எனவும் பிரிட்டிஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.



 தற்போதைய நிலைக்கு முடிவினை காண நாங்கள் அயராது பாடுபடுகின்றோம். அவர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் எங்களின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக உள்ளன. 24 மணிநேர மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கியுள்ளோம் என பிரிட்டிஸ் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந

Jan12

உலக அளவில் கோவிட் - 19  தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்

Aug14

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்

Mar07

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

Mar29

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண

Feb28

உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட

Mar09

உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன

Mar25

  உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி

Mar13

ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந

Mar21

 உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா

Sep05

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Apr21

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற