More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 6 வயது மகனின் சடலம் பயணப்பெட்டியிலிருந்து மீட்பு; தாய் கைது
6 வயது மகனின் சடலம் பயணப்பெட்டியிலிருந்து மீட்பு; தாய் கைது
May 23
6 வயது மகனின் சடலம் பயணப்பெட்டியிலிருந்து மீட்பு; தாய் கைது

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்டியிலிருந்து மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



அமெரிக்காவின் மின்னிசொட்டா மாநிலத்தின் மின்னிபோலிஸ் நகரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.28 வயதான பெண் ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.



சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்த போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.



வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தில் இரத்தம் தோய்ந்திருப்பதனை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் வாகனத்தை சோதனையிட்ட போது பயணப் பெட்டியொன்றில் ஆறு வயதான குறித்த பெண்ணின் மகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.



சிறுவன் தொடர்பான விபரங்களையோ, மரணத்திற்கான காரணம் பற்றிய விபரங்களையோ பொலிஸார் வெளியிடவில்லை.



குறித்த சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் முதல் தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



தாய், சிறுவனை உரிய முறையில் பராமரிக்காத காரணத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் சிறுவன் வளர்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.



மகனை பராமரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்த காலத்தில் சிறுவன் அதிகளவில் குழப்பங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



எதிர்காலத்தில் தீயனைப்பு படை வீரனாக வர வேண்டுமென சிறுவன் கனவு கண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.



சிறுவனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தாயையும் மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar02

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய உக்ரைன்

May02

எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந

Jul26

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால

Nov05

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக

Feb21

துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த

Mar12

கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்

Sep14

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல

Sep06

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப

Mar07

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக

Jan17

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந

Jul21

மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட

Jan27

அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத

Feb08

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா

Aug18

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ

Feb27

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அ