More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கனேடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் ஆதரவு பிரேரணையால் கடும் சீற்றத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
கனேடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் ஆதரவு பிரேரணையால் கடும் சீற்றத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
May 23
கனேடிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் ஆதரவு பிரேரணையால் கடும் சீற்றத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.



இலங்கைக்காக கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் அமெண்டா ஸ்ட்ரோஹானுடனான சந்திப்பின் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.



கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக்க கூறப்படும் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பினையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த பிரேரணையின் அப்பட்டமான பொய்யான உள்ளடக்கத்தை திட்டவட்டமாக நிராகரிக்கின்றோம்.



இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை. சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழிநுட்ப சொற்களை எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.



இந்த பிரேரணையின் தவறான மற்றும் பாரபட்சமான தன்மை , இதன் விளைவாக பொது களத்தில் உருவாகியுள்ள இலங்கை மீதான எதிர்மறையான கருத்துக்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு , பிரேரணையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் 6 தசாப்தத்திற்கும் மேலாக நீடித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்று பதில் உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.



இதன் போது அமைச்சரின் கோரிக்கைக்கு பதிலளித்த கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் , கனடாவின் நாடாளுமன்ற பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் கட்டுப்பாடற்ற சட்டமியற்றும் தன்மையைக் குறிப்பிட்டார்.



தகுந்த நடவடிக்கைக்காக அரசியல் முன்முயற்சியின் உள்ளடக்கத்தினை கனடாவின் வெளியுறவு , வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி திணைக்களத்திற்கு தெரிவிக்கவும் அவர் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு கா

Feb04

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி

Jun02
May23

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்

Mar22

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்

Jun27

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ

May21

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை

Mar08

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Sep25

ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள்

Aug19

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜ

Feb06

கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி

May04

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க