தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அடைந்துள்ளதன் காரணமாக அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள அலர்ஜி நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தில், பல நாடுகளில் பரவி வரும் இந்த குரங்கம்மை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் உள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் பரிசோதனைக்கு தேவையான ரசாயனங்கள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த தொற்று பல நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.