உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்துனர்.
இந்த பாலம் Sievierodonetsk மற்றும் Lysychansk வை Rubizhne பகுதியுடன் இணைக்கும் பாலமாகும். அந்த பாலத்தில் உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை பொருத்தி திட்டமிட்டபடி வெடிக்கச் செய்யும் வீடியோ காட்சியினை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படையினருடனான போர் பல வாரங்கள் நீடிக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.