ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் நாட்டவர் ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதைக் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் 18ஆம் திகதி, உக்ரைனின் Dovzhyk கிராமத்திலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்.
அந்த வீட்டில், Mykola Kulichenko, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் Iryna என்னும் அவரது சகோதரி ஆகியோர் வாழ்ந்துவந்துள்ளார்கள். அந்த ரஷ்யப் படையினர் வரும்போது நல்ல வேளையாக Iryna வீட்டில் இல்லை.
அந்த பகுதியில் ரஷ்யப் படைவீரர்களின் இராணுவ தளவாடங்கள் மீது யாரோ குண்டு வீசியதால், குண்டு வீசியவரைத் தேடிக்கொண்டிருந்த ரஷ்யப் படையினர் Mykola வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.