பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசும் ஏவுகணைகளை, தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசி ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடித்துள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள மேற்கத்திய நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களில் Brimstone வகை ஏவுகணைகளும் அடங்கும்.இந்த Brimstone ஏவுகணைகள், பொதுவாக விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வீசப்படும். ஆனால், தற்போது சிறிய வாகனங்களில் இருந்து வீசும் வகையில் அந்த ஏவுகணைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.உக்ரைன் வீரர்கள் அந்த Brimstone ஏவுகணைகளை தங்கள் ட்ராக்டர்களிலிருந்து வீசுகிறார்கள்.
அவர்கள் பிரித்தானியாவிடம் அந்த ஏவுகணைகளை ஏவுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, தற்போது அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
அவ்வகையில், ட்ராக்டர்களிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்களை சிதறடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.சில விநாடிகள் வித்தியாசத்தில் இரண்டு ரஷ்யப் போர் வாகனங்கள் வெடித்துச் சிதறும் அந்த காட்சி டான்பாஸ் பகுதியில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.