More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • .சீனா விமான விபத்து; கருப்பு பெட்டியில் வெளியான அதிர்ச்சி தகவல்!
.சீனா விமான விபத்து; கருப்பு பெட்டியில் வெளியான அதிர்ச்சி தகவல்!
May 18
.சீனா விமான விபத்து; கருப்பு பெட்டியில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில், போயிங் 737-800 ரக விமானம் கடந்த மாா்ச் மாதம் 21-ஆம் திகதி விபத்துக்குள்ளானது. சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள் , 2 பைலட்,7 விமான ஊழியா்கள் என மொத்தம் 132 போ் அதில் பயணம் செய்தனா்.



இந்த விபத்தில் விமானத்தில் சென்ற அனைவரும் உயிாிழந்தனா். சீனாவில் கடந்த 28 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து இது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த விமானத்தின் கருப்பு பெட்டி சேகரித்த தகவவல்களை அமெரிக்க புலனாய்வு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். அதன்படி விமானி அறையில் இருந்த யாரோ தான் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்து உள்ளனர்.



விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாாிகள் மற்றும் அருகில் பறந்து கொண்டு இருந்த விமானங்களின் விமானிகள் பலமுறை அழைப்பு விடுத்தும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் பதிலளிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த விபத்து குறித்து, புலானாய்வு பணிகளில் சீனாவிற்கு உதவும் வகையில் அமொிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பினரும், போயிங் நிறுவனத்தை சோ்ந்தவா்களும் சீனாவிற்கு சென்றுள்ளனா். இவா்கள் செய்த ஆய்வில் விமானத்தில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இருப்பதாக கண்டறியவில்லை என தொிவித்துள்ளனா்.



விபத்து பற்றிய ஆய்வு பணிகளுக்கு தாங்கள் பொறுப்பில்லை என ஏர்லைன் சார்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. சேதமடைந்த கருப்புப் பெட்டியை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடந்து வருவதாக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Apr09

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3

Aug13

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி

Feb25

1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ

Mar03

உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர

May20

இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு

Mar28

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar08

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர

Mar30

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப

Apr19

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

Mar04

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர

May02

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த

Mar12

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ

Mar25

2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்க

Mar23

உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண