More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!
31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!
May 17
31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!

 31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.



இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.



இதனையடுத்து நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வாக்கெடுப்பில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்தார்.



அத்துடன், வாக்கெடுப்பின் போது எந்தவொரு தரப்பினருக்கும் வாக்களிக்காமல் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.



அதேசமயம் வாக்களிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்ட தரப்பில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குகளை செலுத்தியிருந்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த

Jun11

இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே

Jun08

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே

Feb02

கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு

Oct20