வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டு மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.திறைசேரியில் பணம் இல்லை, மின்வெட்டு 15 மணி நேரமாகலாம், ஒரு நாளைக்கு போதுமான பெட்ரோலே கையிருப்பில், எரிவாயுவுக்கு டொலரை தேட வேண்டியுள்ளது, பணவீக்கம் அதிகரிக்கும், எரிபொருள் விற்பனையில் நட்டம். என எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அபாய நிலைகளையும் தெரிவித்துள்ளார்.