நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் பீஸ்ட். விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான இப்படம் வசூல் ரீதியான வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக படுமோசமான விமர்சிக்கப்பட்டு வந்தது.
அதிலும் எல்லைமீறிய லாஜிக் மீறல்கள் இப்படத்தில் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாக ஒரு மாதத்திற்கு மேலாகிய நிலையில் திடீரென இணையத்தில் பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சிவராமன் சஜன் என்பவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, பல கேள்விகள் உள்ளன என்றும் கூறியிருந்தார். அந்த காட்சியில் பல லாஜிக் மீரல்கள் காட்சிப்படுத்தியது தான் அதற்கு காரணம்.
இதனை நெட்டிசன்கள் பலர் கலயாத்து என்ன நெல்சா இப்படி பண்ணிட்ட என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பீஸ்ட் படத்தை விட பாலிவுட் படத்தில் எப்படிபட்ட காட்சிகள் கூட லாஜிக் மீரல்களை வைத்துள்ளனர் அது தெரியலையா என்றும் ஆதரவாக பேசியும் வருகிறார்கள். தற்போது அந்த வீடியோவை 9 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுளது.