உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தின.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன.
இதனையடுத்து ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின.
அந்தவகையில் ஃபிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் ரஷ்யாவை விட்டு வெளியேறியது.
இதையடுத்து ரஷ்யாவில் இயங்கி வந்த ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை தேசியவுடைமை ஆக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது