More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஆர்ஆர்ஆர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! முழு விவரம்
ஆர்ஆர்ஆர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! முழு விவரம்
May 15
ஆர்ஆர்ஆர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! முழு விவரம்

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது!



ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது. இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஜீ5 தளத்தில் மே 20, 2022 அன்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகுமென ஜீ5 அறிவித்துள்ளது. படம் வெளியாகி 50 வது நாளை கடந்த நன்நாளில் படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்த இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜீ5 தளம் வெளியிட்டுள்ளது.



இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படம், மார்ச் 25, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி, இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.



ஆர்ஆர்ஆர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! முழு விவரம்



 



மே 20 நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் என்பது, ஜீ5 தளத்தில் ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படத்தை கொண்டாட, ரசிகர்களுக்கு மேலும் ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. 4K தரத்திலும், டால்பி அட்மாஸ் தரத்திலும் வீட்டிலிருந்தபடியே வீட்டுத் திரைகளிலும், மொபைல் போனிலும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.



இந்த திரைப்பட வெளியீட்டு அறிவிப்பைக் குறிக்கும் வகையில் ஜீ5 தளத்தால் வெளியிடப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக டிரெய்லரால், தென்னிந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தென்னிந்திய மொழி பேசாத பார்வையாளர்களும் ஜீ5 தளத்தின் இந்த உலக டிஜிட்டல் பிரிமியரைப் பற்றி மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் படத்தின் ஒரிஜினல் மொழியில் உருவான வசனங்களுடன் படத்தை சப்டைட்டிலுடன் பார்க்கலாம்! “ஆர் ஆர் ஆர்” RRR திரைப்படம் ஜீ5 தளத்தில் TVOD இல் கிடைக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவக

Aug10

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப

Aug16

நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்

Feb25

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இர

May03

நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட

Feb15

காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத

Jun15

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட

May01

இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ

Oct18

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ

Nov02

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட

Mar05

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவ

Feb15

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி

Jan01

தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக

Jun14

அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந