More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
May 13
ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதன் அடுத்த நிமிடமே இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.



முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.



ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி



 



இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக உள்ளது. அதிலும் சாதகமான நிலையை ரணில் எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.



இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடலில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனுதவியாக வழங்க பல நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதில் ஜப்பானும் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும். ஜப்பான் அரசாங்கம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.





ஏற்றுமதி நிதியளிப்பு நிறுவனமான இந்தியா எக்சிம் வங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது.



 



ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி - 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி



நாடு அதன் மோசமான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலங்கைக்கு உடனடி கடன் மறுசீரமைப்பு அவசியமாக உள்ளதென எக்ஸிம் வங்கியின் நிர்வாக அதிகாரி ஹர்ஷா பங்கரி தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப

Jul26

உபெக்ஷா சுவர்ணமாலி.

இலங்கையின் பிரபல நடிகைய

Oct13

யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும

Feb01

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம

Oct06

மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப

Jun02