காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை.
கொழும்பில் இரண்டு போராட்டத் தளங்களில் அமைதியான போராட்டக்காரர்கள் ஆயுதம் ஏந்திய ராஜபக்ச ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்களன்று நாடு முழுவதும் அதுதான் நடந்தது என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
பிரதமரின் பதவி விலகலுடன்;, அமைச்சர்கள் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது,
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மற்றும் நசுக்கப்பட்ட நமது தாய்நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மீட்டெடுக்கும் மற்றும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மிக முக்கியமான பணிக்காக நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டியது காலத்தின் தேவை.
இது, இலங்கை அதன் அனைத்து குடிமக்களுடன் அழியும் முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் அரசாங்க ஆதரவாளர்கள் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்களை பெண்கள், சிறுவர்கள், மதகுருமார் என்று பாராமல் தாக்கினர்.
இதனையடுத்து திங்கட்கிழமை நடந்த மோதல்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்;, பிரதேச சபைத் தலைவர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.