More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் ராஜபக்ச சகோதரர்களுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது: சீமான் கடும் சீற்றம்
இந்தியாவில் ராஜபக்ச சகோதரர்களுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது: சீமான் கடும் சீற்றம்
May 12
இந்தியாவில் ராஜபக்ச சகோதரர்களுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது: சீமான் கடும் சீற்றம்

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து, இனப்படுகொலையாளிகளான ராஜபக்ச சகோதரர்கள் உட்பட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் ஓட ஓட விரட்டப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகள் உட்பட உடமைகள் தீயிட்டு கொளுத்தப்படும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன எனவும் சீமான் கூறியுள்ளார்.





சிங்கள இனவாதமும், பௌத்த மதவாதமும் இணைந்து தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையை தகர்த்து, அதற்காக போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது.



மக்களின் நலனின் அக்கறை செலுத்தாமல், மத, இன வெறியை மக்களுக்கு ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்த்து, அதன் மூலம் மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம்.





அதற்கு துணை போன சிங்கள மக்கள் ஐம்பதாண்டுகள் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளாதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர் என சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்

Feb22

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப

Jan31

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே

Oct02

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி

Feb23

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த

May05

பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்

Jun25