திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் அதற்கு பிறகு வைத்திருக்கும் திட்டம் பற்றி புது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில், அவர்கள் திருமணம் எப்போது என தான் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர் என சமீபத்தில் தகவல் பரவியது.
திருமலை திருப்பதியில் விக்கி - நயன் திருமணம் நடைபெற இருக்கிறது என தெரிகிறது.
ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொண்டாலும் அவர்கள் இருவருக்கும் ஹனிமூன் செல்லும் பிளான் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இருவருமே சினிமாவில் படுபிஸியாக இருந்து வருகின்றனர் என்பது தான் காரணம்.
நயன்தாரா தற்போது ஷாருக் கான் - அட்லீ படம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதனால் திருமணம் முடிந்த பிறகும் ஹனிமூன் செல்வதற்காக அவர்கள் பிரேக் எடுக்கப்போவதில்லை என தெரிகிறது.