கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில், இலங்கையில் இராணுவத்தினரை சேவைக்கு அழைத்தமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அமைதியான எதிர்ப்பாளர்கள் இராணுவ மற்றும் குடியியல் தரப்பின் வன்முறை அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் நெட் பிரைஸ் செவ்வாயன்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவலையடைகிறது.
இந்தநிலையில் வன்;முறைச் செயல்களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் கைது செய்து வழக்குத் தொடருமாறு பேசசாளர் வலியுறுத்தியுள்ளார்