More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பிரமுகர்கள் குழு நாட்டிலிருந்து வெளியேறும் தகவல்! கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பிரமுகர்கள் குழு நாட்டிலிருந்து வெளியேறும் தகவல்! கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
May 10
பிரமுகர்கள் குழு நாட்டிலிருந்து வெளியேறும் தகவல்! கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை சோதனையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



பிரமுகர்கள் குழுவொன்று நாட்டிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 





அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.





இதற்காக கொழும்பில் ஐந்து விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த நிலையில் கொழும்பு - ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்தன.



நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என தெரிவிக்கப்பட்டும் நிலையில், ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்திருந்தன. 





இதேவேளை  திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பதுங்கி இருக்கலாம் என தெரிவித்து கடற்படைத் தளத்திற்கு முன்னால் குழுமியுள்ள மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May09

 இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்

Mar12

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம், 

Sep17

காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த

May25

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை

May12

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

Aug28

களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி

Oct03

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை

Jan19

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம

Feb01

ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்

Feb07

2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம

Jul17

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Oct06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ

Jul22

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம