தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா ஹீரோவாக நடித்த நிலையில் அவருக்கு நண்பர் ரோலில் ராகுல் ராமகிருஷ்ணா என்பவர் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது ராகுல் ராமகிருஷ்ணா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் தனது வாருங்கால மனைவி ஹரிதா உடன் முத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் ஆனாலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அவரை அதிகம் ட்ரோல் செய்தும் வருகின்றனர். அந்த பெண் ஈடுபாடு இல்லாமல் அந்த போட்டோவுக்கும் போஸ் கொடுத்திருப்பது போல தெரிகிறது என நெட்டிசன்கள் நடிகரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும் நேற்று அந்த பெண்ணின் பெயர் பிந்து என தகவல் பரவியது. அவரது பெயர் பிந்து அல்ல ஹரிதா என தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.