கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்தனர். இதன்போது ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், கலவரம் ஏற்பட்ட கால முகத்திடலுக்கு சென்ற எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்த எதிர்ப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே சற்று முன்னர் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.