ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்லை எனவே அவர்களிடம் சரணடையப்போவதில்லை என்று மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படைத்தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.
சரணடைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிரிக்கு இவ்வளவு பெரிய பரிசை தம்மால் வழங்க முடியாது, பிடிபடுவது என்றால் இறந்துவிட்டதாக அர்த்தம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போராடுவதாக தெரிவித்துள்ள உக்ரைன் படைத்தளபதிகள், உக்ரைனுக்கு பயங்கரவாதத்தை கொண்டு வரும் எதிரிக்கும எதிராகவும் அவர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராகவும் போராடுவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த இரும்பு ஆலையில் சுமார் ஆயிரம் உக்ரைன் படையினர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்களா? என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று ஆலைக்குள் சிக்குண்டிருக்கும் உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.
மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.
இன்றும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து இரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவர்கள் ஆலையைத் தகர்க்க முயல்வதாகவும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படையதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்