More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய வீரர்களை விரட்டியடித்த உக்ரைன்!
இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய வீரர்களை விரட்டியடித்த உக்ரைன்!
May 07
இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து ரஷிய வீரர்களை விரட்டியடித்த உக்ரைன்!

மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, உக்ரைன் படையினர் ரஷியாவை எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் வடகிழக்கு பகுதியில் இருந்த 2 முக்கிய  நகரங்களில் இருந்து ரஷிய படைகளை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் கிழக்கு பகுதியை கட்டுக்குள் கொண்டு வர ரஷியா தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 150 மில்லியன் டாலர்கள் நிதி உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.



உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கி குண்டுகள், ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை நான் அறிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனின் மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு முற்றுகையிட்டது. அந்நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தி பெரும்பாலான கட்டிடங்களை சேதப்படுத்தி உருக்குலைய வைத்தது.



உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், மரியுபோலில் உள்ள அஜோவ்டஸ் உருக்கு ஆலையில் இருந்து மேலும்  50 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.



உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியது.



இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில். ஐரோப்பிய யூனியன் தலைவர் ச் கூறுகையில், ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.



இதனால் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மரியுபோல், லவீவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த நிதி உதவும் என கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்க

Jun17

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக

Jun08

சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங

Apr01

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான

May27

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி

Apr11

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்

Jun11

வளைகுடா நாடான குவைத்தின் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக

Jan25

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை வி

May15

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Oct15

வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை

Sep24

80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச

Apr19

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர

Jun06

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும

May01

 

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீ

Mar10

உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத