More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • பொதுவாக இன்றைய காலத்தில் பல பெண்கள் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கட்டி
பொதுவாக இன்றைய காலத்தில் பல பெண்கள் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று  நீர்க்கட்டி
May 04
பொதுவாக இன்றைய காலத்தில் பல பெண்கள் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீர்க்கட்டி

பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரிய வராது.



இதன் அறிகுறிகளை முன்பே அறிந்து கொண்டால் எளியமுறையில் இருந்து இதிலிருந்து விடுபடலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.



இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும்.



வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை அறிகுறியாகும். 



கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. 



கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது. உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும்.



 கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுக வேண்டும்.



உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு

Sep22

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,

Mar22

இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்ச

Mar05

சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்

Feb18

இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த

Feb07

  • காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து

May04

தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.

Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

Feb07

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Jan20

நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு

Mar06

பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட

Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக

Feb07

அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம

Mar22

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு