தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவரை நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சாங் யங்-கில் ஈடுபட்டிருந்தார். இதன்போது போது அவருக்கு பின்புறமாக வந்த நபர் ஒருவர் சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரது மண்டை உடைந்து இரத்தம் கொட்டியதையடுத்து, சாங் அருகிலிருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே சாங் யங்-கில்லை தாக்கியவர் 70 வயதான யூடியூப் பிரபலம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.